எம்பி கனிமொழியின் பிறந்தநாள்.., முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
தமது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து பெற்றார்.
ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி
திமுக, துணைப் பொதுச்செயலரும், பார்லிமென்ட் திமுக, குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை, தன் அண்ணன் முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கை கொடுத்து காலை தொட்டு கும்பிட்டு ஆசிபெற்ற கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி அவர் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது துர்கா ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் இருந்து கனிமொழியை வாழ்த்தினார்.
முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கனிமொழி எம்.பி. மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்ற கனிமொழிக்கு திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் பங்கேற்று தங்க மோதிரம், குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்குகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |