தகுதி பற்றி பேசிய அண்ணாமலை.., வெற்றிக்கு பின் கனிமொழி கொடுத்த பதிலடி
தகுதி பற்றி பேசிய அண்ணாமலைக்கு வெற்றிக்கு பின் திமுக எம்பி- கனிமொழி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
கனிமொழி கூறியதாவது..,
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் எனது வெற்றிக்காக உழைத்த, பிரச்சாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும், மீண்டும் என் மீது நம்பிக்கை வைத்த தூத்துக்குடி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை. இங்கு தாமரை மலராது என்பதை மிக தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆட்சி மாற்றம் நடக்குமா என்பது குறித்து இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர். அங்கே தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்.
அண்ணாமலை, அடிக்கடி கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்பார். இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி என்ற தகுதியில் நான் அவருக்கு பதில் சொல்கிறேன்.
அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக இங்கே நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லதல்ல" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |