வண்ணப்புகை குண்டு வீசப்பட்டபோது நானும் இருந்தேன்! ஒருவர் மேஜை மீது ஏறி ஓடினார்..எம்.பி கனிமொழி
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் புகை குண்டு வீசப்பட்டபோது தானும் அங்கு இருந்ததாக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பரபரப்பு
இன்றைய தினம் குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியபோது, மக்களவையில் இருந்து இளைஞர் ஒருவரும், பெண்ணொருவரும் அவைக்குள் குதித்து வண்ண புகையை உமிழும் பொருளை தூவினர்.
இதனால் அவை முழுவதும் மஞ்சள் நிற புகை பரவியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக வெளியேற போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
கனிமொழி
இந்த நிலையில் எம்.பி கனிமொழி இதுகுறித்து கூறுகையில், 'கலர் புகை குண்டு வீசியபோது மக்களவைக்குள் நான் இருந்தேன். திடீரென சத்தம் கேட்டபோது ஒருவர் மேசைகள் மீது ஏறி ஓடினார்.
இருவரும் தங்கள் காலுக்கு கீழ் இருந்து சிலிண்டர் போன்ற கருவியில் இருந்து புகையை பரப்பினர்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |