தூக்கிட்டு உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபிதா தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் மங்கள கௌரி மடுவே, கோகிலே, கிருஷ்ணா ருக்மிணி, தீபாவு நின்னடே காலியு நின்னடே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷோபிதா.
31 வயதான இவர் திருமணத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து விலகிவிட்டார். பின்னர் கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வந்த நடிகை ஷோபிதா தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், ஷோபிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது இந்த முடிவுக்கான காரணம் அறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |