சர்வதேச விருதை வென்ற கண்ணே கலைமானே
அமெரிக்க சோகால் விருதை வென்றுள்ளது சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே திரைப்படம்.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான படம் கண்ணே கலைமானே.
சூப்பரான விமர்சனங்களை வென்ற இப்படம் 2023ம் ஆண்டு பிரான்சில், இந்தியா பிரெஞ்சு சர்வதேச விழாவில் திரையிடப்பட்டதுடன் விருதுகளையும் குவித்தது.
சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சிறந்த படத்துக்கான 17வது அமெரிக்க சோக்கால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது.
மேலும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டவுள்ளது.
காலம் கடந்தாலும் நல்ல படைப்புகள் பேசப்படும் என்றும், கண்ணே கலைமானே தொடர்ந்து விருதுகளை குவிப்பதில் மகிழ்ச்சி எனவும் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |