தாலியை திருடிட்டு போய்ட்டாங்க! பிக்பாஸ் புகழ் நடிகர் சினேகனை நினைத்து கலங்கும் மனைவி கன்னிகா
தாலி திருடு போனதை தாங்கி கொள்ள முடியாமல் அழுதேன் என பிக்பாஸ் புகழ் சினேகனின் மனைவி கன்னிகா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சினேகன். இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால்தான் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இதையடுத்து இவர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் தன்னை விட 16 வயது குறைவான கன்னிகா ரவி என்ற நடிகையை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அங்கு அவர் திடீரென கன்னிகாவை நினைத்து வருந்துகிறார். இந்நிலையில் கன்னிகா அளித்த சமீபத்திய பேட்டியில், காதலை முதலில் சொன்னது சினேகன்தான்.
அதை ஏற்க எனக்கு 5 மாதங்கள் ஆயிற்று. ஒரு நாள் கார்த்திகை தீபத்தின் போது வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த ஒளியில்தான் என்னுடைய காதலை அவரிடம் சொன்னேன்.
அப்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்தேன். அந்த தாலியை கையில் வைத்து சினேகன் போட்டோ எடுத்துக் கொண்டார். மிகவும் சென்டிமென்டாக இருவரும் அதை பத்திரமாக வைத்திருந்தோம்.
ஆனால் ஒரு நாளை அந்த தாலி திருட்டு போய்விட்டது. இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது கொண்டே இருந்தேன் என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.