மலையாளிகளுக்கு பெருமை சேர்த்த கண்ணூர் பெண் - கனடாவில் வென்ற அழகி பட்டம்
கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற அழகிப் போட்டி
மிசஸ் கனடா எர்த் 2024 என்ற பட்டத்தை மலையாளி மிலி பாஸ்கர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கனடிய அழகிகளை வீழ்த்தி கண்ணூர் தாளப்பைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.
இந்தியர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. இந்த பெண் Electronics and Communication இன்ஜினியர்.
அவர் தனது கணவர் மகேஷ் குமார் மற்றும் குழந்தைகள் தமன்னா மற்றும் அர்மான் ஆகியோருடன் 2016 இல் கனடாவிற்கு சென்றார்.
மிசஸ் கனடா எர்த் போட்டியில் வென்ற பிறகு, அடுத்த ஆண்டு மிசஸ் குளோபல் எர்த் போட்டியில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் எனவும் கூறப்படுகிறது.
குறித்த பெண் ஒரு யோகா பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார்.
52 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில் கலந்துக்கொள்ள கேரள பெண் முதலிடம் பெற்று பட்டத்தை வென்றுள்ளமையால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |