மருத்துவர் இல்லாத நேரத்தில் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி
Doctor's driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நேரத்தில், அவரது சாரதி, நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி
உத்தரப்பிரதேசத்திலுள்ள கான்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிபவர் Dr. ராம்கேஷ். புதன்கிழமையன்று, ராம்கேஷ் தன் நோயாளி ஒருவர் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், ராம்கேஷின் சாரதி, மருத்துவரின் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளுக்கு மருந்துச்சீட்டில் மருந்து எழுதிக்கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அந்த மருந்துகளில் சில மருத்துவமனையில் கிடைக்காது என்றும், அவற்றை வெளியிலிருந்துதான் வாங்கவேண்டும் என்றும் அந்த சாரதி கூறியுள்ளார்.
இந்த வீடியோ, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்தை எட்டிய நிலையில், அவர் மருத்துவர் ராம்கேஷை அழைத்து அவரது சாரதி செய்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அந்த விடயம் குறித்து ராம்கேஷ் விளக்கமளிக்கவேண்டும் என்று கூறியுள்ள தலைமை மருத்துவ அதிகாரி, அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லையெனில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு இந்த விடயம் குறித்து தகவலளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனது சாரதியை பணீநீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் மருத்துவர் ராம்கேஷ்.