அன்று வாட்டர் பாட்டில் விற்றவர்., இன்று ஒட்டுமொத்த இந்தியாவை கொண்டாடும் சூப்பர் ஹீரோ
காந்தாரா என்ற திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டியின் அசுரத்தனமான பயணம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
எளிமையான தொடக்கம்
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் ஜூலை 7, 1983ம் ஆண்டு பிறந்த ரிஷப் ஷெட்டி, ஆழமான கலாச்சார பின்னணியில் வளர்ந்தார்.

சினிமாவில் உச்சத்தை அடைய வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுகளுடன் பயணத்தை தொடங்கிய ரிஷப் ஷெட்டி, பிழைப்புக்காக பல சிறு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் படி, டீ தூள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் சோலார் பவர் பொருட்களை சந்தைப்படுத்துவது போன்ற பல வேலைகளை செய்துள்ளார்.
அத்துடன் மும்பையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் அலுவலக ஊழியராகவும், ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் வெற்றி
பல்வேறு விடாமுயற்சிகளுக்கு பிறகு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் நம்பமுடியாத வெற்றியை அவருக்கு தந்தது.
வெறும் ரூ.15 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் சுமார் ரூ.400 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து “காந்தாரா அத்தியாயம் 1” என்ற காந்தாராவின் முன் கதை கொண்ட திரைப்படத்தை வெளியிட்டு பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய சாதனையை படைத்தார்.

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் திகதி வெளியான “காந்தாரா அத்தியாயம் 1” திரைப்படம் 12 நாட்களில் சுமார் ரூ.675 கோடியை வசூல் செய்து அசத்தியுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
ரிஷப் ஷெட்டி சொத்து மதிப்பு

நியூஸ் 18 அறிக்கையின் படி, ரிஷப் ஷெட்டியின் நிகர மதிப்பு சுமார் ரூ.70 கோடியில் இருந்து ரூ.90 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு பிரகதி ஷெட்டியை திருமணம் செய்து கொண்ட ரிஷப் ஷெட்டி, இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |