கண் திருஷ்டியை ஒழித்துக்கட்ட இதோ சுலபமான பரிகாரம்!
பொதுவாக நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்வுகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.
அந்தவகையில் கண் திருஷ்டியை எளிய முறையில் போக்க கூடிய ஒரு சுலபமான பரிகாரம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
பரிகாரம்
- ஒரு தேங்காயின் மேலே கற்பூரத்தை வைக்கும் போதோ அல்லது எலுமிச்சம் பழத்தின் மேல் கற்பூரத்தை வைக்கும் போதும் இதோடு ஒரு படிகார கல்லை வைத்துக் கொள்ளுங்கள்.
- தேங்காயின் மேல் சிறிய படிகார கல் வைத்துவிட்டு அதன் மேலே கற்பூரத்தை வைத்து, சூடம் கொளுத்தி குறிப்பிட்ட நபரின் தலையை மூன்று முறை சுற்றி தேங்காய் உடைத்தால் முழுமையான திருஷ்டியும் கழிந்து போகும்.
- இதே போல் தான் எலுமிச்சம்பழம், பூசணிக்காயை திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் போதும் கற்பூரத்தின் கீழே படிகார கல்லை வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்தபடியாக கையில் கல்லுப்பு வைத்துக் கொண்டு திருஷ்டி சுற்றி போட்டாலும் சரி, அந்த கல் உப்புடன் ஒரு சிறிய துண்டு படிகாரம் சேர்த்து திருஷ்டி சுற்றிப் போட்டால் உங்களை பிடித்த கண்திருஷ்டி முழுவதும் உங்களை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பாக இந்த திருஷ்டி கழிக்கும் பரிகாரத்தை திங்கள் கிழமை மற்றும் ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021