எலான் மஸ்க் தான் முதல் மரபணு கலப்பினம்! ட்விட்டரில் இடைநீக்கம் செய்ததால் மோசமாக விமர்சித்த பிரபலம்
பிரபல ராப் பாடகர் உலகப் பணக்காரர் எலான் மஸ்க் குறித்து கேலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வன்முறையை தூண்டும் கருத்துக்கள்
ஹாலிவுட் பிரபலங்கள் கிம் கர்தாஷியன் - கன்யே வெஸ்ட் ஆகியோர் விவாகரத்து குறித்த செய்தி பரபரப்பானது. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கன்யே வெஸ்ட் பதிவிடுவதாக கூறி ட்விட்டர் அவரது கணக்கை இடைநீக்கம் செய்தது.
எலான் மஸ்க் உடனான உரையாடல்களை கன்யே வெஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
@Getty Images
எலான் மஸ்க் மீது மோசமான விமர்சனம்
இந்த நிலையில் கன்யே வெஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில், 'எலான் பாதி பாதி சீனராக இருக்க முடியும் என்று நான் மட்டும் நினைக்கிறேனா? அவருடைய சிறுவயது படங்களை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சீன மேதையை அழைத்துச் சென்று தென் ஆப்பிரிக்க சூப்பர் மொடலுடன் இணைத்துக் கொண்டால் எலான் மஸ்க் கிடைப்பார்.
அநேகமாக 10 முதல் 30 எலான்களை உருவாக்கியிருக்கலாம். அதில் இவர் தான் முதல் மரபணு கலப்பினமாக இருப்பார். அதேவேளையில், தேவாலயத்தில் சாப வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன். ஆனால், ஒபாமாவைக் குறிக்க வேறு வார்த்தை என்னிடம் இல்லை' என தெரிவித்துள்ளார்.
கன்யே வெஸ்ட்டின் இந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
@Getty Images