பிரபல அமெரிக்க ராப் இசைக்கலைஞருக்கு பிரான்ஸ் எதிர்ப்பு
பிரபல அமெரிக்க ராப் இசைக்கலைஞர் ஒருவர் பிரான்சில் இசை நிகழ்ச்சி நடத்த அந்நகர மேயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இசைக்கலைஞருக்கு பிரான்ஸ் எதிர்ப்பு
பிரபல அமெரிக்க ராப் இசைக்கலைஞரான கான்யே வெஸ்ட், ஜூன் மாதம் 11ஆம் திகதி பிரெஞ்சு நகரமான Marseilleஇல் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு பிரான்சில் வரவேற்பில்லை என அந்நகர மேயரான Benoit Payan தெரிவித்துள்ளார். சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வெறுப்பையும் வெட்கமற்ற நாஸிசத்தையும் ஊக்குவிப்பவர்களை Marseille காட்சிப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
பிரபலமாக விழங்கியவரான யே என்னும் கான்யே, சமீப காலமாக இனவெறுப்பு மற்றும் யூத வெறுப்பு கருத்துக்களை வெளியிட்டுவருவதால் ஏராளமான ரசிகர்களையும் பிசினஸையும் இழந்துவருகிறார்.
இந்நிலையில், யூத அமைப்பொன்றின் முன்னாள் தலைவரான Fabienne Bendayan என்னும் பெண்ணும், சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வெளிப்படையாக ஹிட்லர் மற்றும் நாஸிக்கொள்கைகளை பறைசாற்றிவரும் ஒருவர், பன்முகத்தன்மை, சகோதரத்துவம் போன்ற குணாதிசயங்களால் பின்னப்பட்ட ஆன்மாவைக் கொண்ட ஒரு நகரத்தில் கால் வைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்த கான்யே வெஸ்ட், அமெரிக்க ஊடக பிரபலமான கிம் கார்டேஷியனின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |