இந்தியா-பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சை: இந்திய வீரர்களுக்கு கபில் தேவ் முக்கிய அறிவுரை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்களின் செயல் குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
கைகுலுக்க மறுத்த இந்தியா
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், போட்டிக்கு பிந்தைய வழக்கமான நடைமுறையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்தது, இது சர்வதேச கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய ராணுவத்தின் ஆயுத படைக்கும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
கபில்தேவ் கருத்து
இந்நிலையில் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில்தேவ், அனைத்து வீரர்களும் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
விளையாட்டு போட்டியின் இறுதியில், யாரேனும் கைகுலுக்க விரும்பவில்லை என்றால் எதிர் தரப்பு அதனை பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சில வீரர்களின் தேவையற்ற பதிவுகள் சர்ச்சைக்குரியதாக மாறக்கூடும் என்று குறிப்பிட்டார்.
மேலும் பாகிஸ்தான் அணியின் விளையாட்டு இந்த போட்டியில் மிகவும் மோசமாக இருந்ததாகவும் கபில் தேவ் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |