ஐபிஎல் போட்டிகளில் விளையாடாதீர்கள்! ஜாம்பவான் வீரர்
கிரிக்கெட்டை ரசித்து விளையாடினால் மன அழுத்தம் இருக்காது என கபில் தேவ் தெரிவித்துள்ளார்
இந்திய வீரர்கள் அழுத்தத்தை தவிர்க்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வேண்டும் - கபில் தேவ்
ஐபிஎல் போட்டிகள் வீரர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஜாம்பவான் வீரர் கபில் தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி தொடராக உருவெடுத்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் அதிக அளவில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த ஜாம்பவான் வீரர் கபில்தேவ், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ஐபிஎல்லில் விளையாடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக நான் தொலைக்காட்சியில் நிறைய முறை கேள்விப்படுகிறேன். நான் ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம். ஒரு வீரருக்கு அர்ப்பணிப்பு இருந்தால் எந்த அழுத்தமும் இருக்காது.
மனச்சோர்வு போன்ற இந்த அமெரிக்க சொற்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நான் ஒரு விவசாயி, நாங்கள் விளையாட்டை ரசித்ததால் விளையாடினோம். மேலும் விளையாட்டை ரசிக்கும்போது எந்த அழுத்தமும் இருக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.
ANI Photo