வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை மீறி என் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்! பிரபல ஜாம்பவான் புகழாரம்
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
இலங்கை - இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி வீரர் சரித் அசலாங்கா 20 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்கள் கைப்பற்றிய அஸ்வின், கபில் தேவின் சாதனையை முறியடித்து இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் கபில்தேவ் அளித்த பேட்டியில், இந்திய அணியில் சமீப காலமாக அஸ்வினுக்கு சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இருப்பினும் அவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார். அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் என் சாதனை இன்னும் சீக்கிரமே முறியடிக்கப்பட்டிருக்கும். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
என்னுடைய காலம் கடந்து விட்டது.
அஸ்வின் புத்தசாலித்தனமான பந்து வீச்சாளர். அடுத்து அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனை அடைய முயற்சி செய்து கட்டாயம் சாதிப்பார் என உறுதியாக நம்புகிறேன் என கூறியுள்ளார்.