48 கொள்ளை சம்பவம்... கையும் களவுமாக சிக்கிய மூவர் கும்பல்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கும்பலை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பெர்ன் மண்டலத்தின் Meinisberg பகுதியில் ஒரு கொள்ளையில் ஈடுபட்டிருந்த போதே, அவசர உதவி அதிகாரிகளால் இந்த மூவர் கும்ப கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
விசாரணையில் இவர்கள் இதுவரை 48 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது அம்பலமானது. இதில் 25 முறை பெர்ன் மண்டலத்தில் கொள்ளையிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவங்கள் மூலம் இதுவரை இந்த மூவர் கும்பல் சுமார் 140,000 பிராங்குகள் வரை ஈட்டியதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்களால் ஏற்பட்ட பொருள் சேதம் 270,000 பிராங்குகளுக்கும் அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
மண்டல பொலிசாரிடம் சிக்கிய அந்த மூவர் கும்பல், ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நிலையில், விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையானது நீதிமன்றம் முடிவு செயுயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
39, 44 மற்றும் 49 வயதுடைய மூவரும் தற்போது விசாரணை கைதிகளாக உள்ளனர்.