காலை உணவிற்கு சத்தான கார கொழுக்கட்டை: இலகுவாக செய்வது எப்படி?
காலை உணவை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை தவிர்ப்பதால், உடல் சீக்கிரமாக சோர்வடைந்து விடும்.
காலை உணவை எப்பொழுதும் போல இட்லி, தோசை என எடுத்துக்கொள்ளாமல் வித்தியாசமாக இந்த கார கொழுக்கட்டையை உண்ணலாம்.
அந்தவகையில், சத்தான கார கொழுக்கட்டையை இலகுவாக எப்படி செய்வது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தாளிக்க
- கடலை எண்ணெய்- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 1
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- ½ ஸ்பூன்
- கடலை பருப்பு- ½ ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- அரிசி மா- 250g
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய்- ½ மூடி
- கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- எலுமிச்சை- 1
வேகவைக்க
- உளுந்து- 100g
- கடலை பருப்பு- 100g
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவைத்து கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய காய்ந்தமிளகாய், கடகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பின் இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இதில் அரிசி மா சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
அடுத்து இதில் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறவும்.
இதனைத்தொடர்ந்து இதில் பெருங்காய தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிணைந்து மாவை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |