பாபர் அசாமின் அணியை நொறுக்கிய வார்னர் படை! PSLயில் த்ரில் ஆட்டம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மியை வீழ்த்தியது.
பாபர் 46
ஐபிஎல் தொடரைப் போல் பாகிஸ்தானில் PSL (Pakistan Super League) எனும் டி20 லீக் தொடர் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகள் மோதின. முதலில் ஆடிய பெஷாவர் ஸல்மி அணியில் சைம் அயூப் (4), கேட்மோர் (7) சொதப்ப, அணித்தலைவர் பாபர் அஸாம் (Babar Azam) 46 ஓட்டங்கள் விளாசினார்.
Didn't miss, didn't mess up 🤙🏻 Babar Azam sends another one to the boundary!#HBLPSLX | #ApnaXHai | #KKvPZ pic.twitter.com/e1azqqB69L
— PakistanSuperLeague (@thePSLt20) April 21, 2025
அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 28 (21) ஓட்டங்களும், தலத் 18 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, அல்ஸாரி ஜோசப் அதிரடியாக 13 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் பெஷாவர் ஸல்மி 8 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்கள் சேர்த்தது. அப்பாஸ் அப்ரிடி, குஷ்தில் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்
வார்னர் அரைசதம்
அதனைத் தொடர்ந்து ஆடிய கராச்சி கிங்ஸ் அணியில் டிம் செய்பெர்ட் முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி வெளியேறினார். ஜேம்ஸ் வின்ஸ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
4️⃣+4️⃣#HBLPSLX | #ApnaXHai | #KKvPZ pic.twitter.com/mOumlTVMTd
— PakistanSuperLeague (@thePSLt20) April 21, 2025
எனினும் அணித்தலைவர் டேவிட் வார்னர் (David Warner) அதிரடியில் மிரட்டினார். அரைசதம் விளாசிய அவர், 47 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் குவித்தார்.
குஷ்தில் ஷா (Khushdil Shah) கடைசிவரை ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் விளாச, கராச்சி கிங்ஸ் அணி 19.3 ஓவரில் 148 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
𝗪-𝗔-𝗥-𝗡-𝗘-𝗥 5⃣0⃣#HBLPSLX | #ApnaXHai | #KKvPZ pic.twitter.com/27cRnWIBik
— PakistanSuperLeague (@thePSLt20) April 21, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |