தமிழக இளைஞரை கரம் பிடித்த பிரான்ஸ் இளம்பெண்! தமிழ் முறைப்படி நடந்த திருமணம்
பிரான்ஸ் பெண்ணுக்கும் தமிழக இளைஞருக்கு காரைக்குடியில் நடந்த காதல் திருமணம்
மூன்று ஆண்டுகால காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது
தமிழகத்தின் காரைக்குடியைச் சேர்ந்த இளைஞருக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் கரைக்குடியைச் சேர்ந்தவர் கலைராஜன். சொந்த ஊரான அமராவதி புதூரில் இருந்து இவர் பிரான்ஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
அங்கு கயல் என்ற பிரான்ஸ் நாட்டு பெண்ணை கலைராஜன் காதலித்துள்ளார். இருவரும் அங்கு ஒன்றாக படித்தவர்கள். கலைராஜன் - கயல் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த காதல் ஜோடி பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதிக்க, குடும்பத்துடன் சொந்த ஊரான அமராவதி புதூருக்கு விரைந்துள்ளனர்.
அங்கு உள்ள கலைராஜன் வீட்டில் தமிழ் கலாச்சார முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது. திருமணத்தில் கலந்துகொண்ட இரு வீட்டாரின் உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.