அண்ணா என்று உதயநிதியை பாராட்டிய அதானி மகன்! ஆவேசமடைந்த காயத்ரி ரகுராம்
தமிழகத்தில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல தொழிலதிபரின் மகன் கரண் அதானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், நேற்று அவர் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கரண் அதானி வாழ்த்து
அந்தவகையில் கெளதம் அதானியின் மகன் கரண் அதானி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.
துணை முதல்வர் பதவிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை உங்களை உண்மையிலேயே தனித்து நிற்க வைத்துள்ளன.
உங்கள் தொலைநோக்கு பார்வை மாநிலத்தை இன்னும் பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்" என்று கூறியுள்ளார்.
காயத்ரி ரகுராம் ஆவேசம்
இவரின் பதிவுக்கு நடிகையும், அதிமுக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம், "மோடி, அமித் ஷா, ஜெய் ஷா மற்றும் பாஜகவிடம் அனுமதி பெற்ற பிறகு, அதானி அம்பானி குடும்பத்தின் பரிந்துரைக்குப் பிறகு துணை முதல்வரானாரா உதயநிதி ஸ்டாலின்?
அதில், ஸ்டாலின் முதல்வரா அல்லது துணை முதல்வரா, அல்லது உதயநிதி முதல்வரா என்று தெரியவில்லையா? ஏன் பதவியேற்பு விழா? துணை முதல்வருக்காக வரலாற்றில் யாரும் செய்ததில்லை. நாடகம் விரிகிறது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |