கிராமத்து ஸ்டைல் கரண்டி முட்டை குழம்பு: எப்படி செய்வது?
முட்டையில் வைட்டமின் ஏ , வைட்டமின் பி5, வைட்டமின் பி12 , பாஸ்பரஸ், வைட்டமின் பி2, செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
மேலும் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் அனைத்தும் முட்டையில் இருக்கின்றன.
இத்தனை ஆரோக்கியமான முட்டையில் சுவையான கிராமத்து ஸ்டைலில் கரண்டி முட்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முட்டை-5
- காய்ந்த மிளகாய்-10
- மல்லி-2 டீஸ்பூன்
- பட்டை-2 துண்டு
- கிராம்பு- 3
- சோம்பு-2 டீஸ்பூன்
- சீரகம்-2 டீஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- சின்ன வெங்காயம்- 15
- தக்காளி-2
- கருவேப்பிலை- 1 கொத்து
- தேங்காய்-1 மூடி
- கடுகு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் செய்முறை ஒரு தாளிப்பு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், மல்லி, பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் சோம்பை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சின்னவெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
இதனை தொடர்ந்து வறுத்து மசாலா, தேங்காய் மற்றும் வதக்கிய வெங்காய தக்காளியை சேர்த்து ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் 2டீஸ்பூன் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம் 5 மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் அதில் அரைத்து வைத்த மசாலா தேவையான தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியாக முட்டைகளை ஒவ்வொன்றாக குழி கரண்டியில் உடைத்து கொதிக்கின்ற குழம்பில் ஊற்றி வேக விடவும்.
15 நிமிடம் வெந்த பின்பு இறக்கினால் சுட சுட கிராமத்து கரண்டி முட்டை குழம்பு ரெசிபி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |