கனடாவில் 5 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த கராத்தே ஆசிரியரின் நிஜ முகம்! மாணவியின் புகாரையடுத்து கைது
கனடாவில் தன்னிடம் பயின்ற மாணவிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கராத்தே ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேட்டர் ரொறன்ரோவை சேர்ந்தவர் ராய் டியோ (47). கராத்தே ஆசிரியர் ஆவார். கடந்த 2016ல் ராய் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என அவரிடம் பயின்ற மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இது தொடர்பில் கடந்த 25ஆம் திகதி விசாரணை தொடங்கியது.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் கராத்தே ஆசிரியர் ராயை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீது 16 வயதிற்குட்பட்ட பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராய் பல ஆண்டுகளாக கராத்தே கற்று தரும் பயிற்சியை கொடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வாளர்கள் அவரது புகைப்படத்தை வெளியிட்டு மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் இருந்தால் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளனர்.