ஒரு தொடருக்கு 200 மில்லியன் பவுண்டுகள்: சவுதி அணியில் இணைந்த பிரபல கால்பந்து நட்சத்திரம்
ரியல் மாட்ரிட் அணியில் நீண்ட 14 ஆண்டுகள் விளையாடிய நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா தற்போது சவுதி அரேபிய அணி ஒன்றில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சின் கரீம் பென்சிமா
14 முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ள ரியல் மாட்ரிட் அணியில் இருந்து பிரான்சின் கரீம் பென்சிமா வெளியேறியுள்ளார். இனி அவர் சவுதி அரேபியாவின் Al Ittihad அணிக்காக களமிறங்க இருக்கிறார்.
@getty
இவரது புதிய அணியை முன்னாள் வோல்வ்ஸ் மற்றும் டோட்டன்ஹாம் தலைவர் நுனோ எஸ்பிரிடோ சாண்டோ நிர்வகித்து வருகிறார். 35 வயதாகும் கரீம் பென்சிமா இரண்டு ஆண்டுகளுக்கு Al Ittihad அணிக்காக களமிறங்க இருக்கிறார்.
ஒவ்வொரு தொடருக்கும் 200 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற இருக்கிறார். சவுதி சாம்பியன்ஸ் போட்டியில் ரொனால்டோவின் Al-Nassr அணியை வென்று சமீபத்தில் தான் பட்டத்தை கைப்பற்றியுள்ளது Al Ittihad அணி.
@getty
ரியல் மாட்ரிட் அணிக்காக 648 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள பென்சிமா 354 கோல்களை பதிவு செய்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ள விரும்பாத பென்சிமா தற்போது சவுதி அணியில் இணைந்துள்ளார்.