காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள் - திருப்பி அறைந்த பெண் போலீஸ்
karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள்
கர்நாடக மாநிலம், தும்கூர் கிராமப்புற தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பி.சுரேஷ் கௌடா.

எம்.எல்.ஏ சுரேஷ் கௌடாவின் மகளான ஐஸ்வர்யா ஆகஸ்ட் 12 அன்று பீம அமாவாசையை முன்னிட்டு ஆர்த்தி உக்கடா கோவிலிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.
அப்போது சிறப்பு தரிசனம் செய்வதில் அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, ஐஸ்வர்யா உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலை அறைந்துள்ளார். பதிலுக்கு அவரும் ஐஸ்வர்யாவை அறைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஐஸ்வர்யா மீது உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ஒரு அரசு ஊழியரைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், ஐஸ்வர்யாவும் உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் மீது புகார் அளித்துள்ளார்.
😱The CCTV footage surfaces after 13 days! 👀
— Sunanda Acharya (@Sunanda_Iam) August 24, 2026
The footage appears to show an MLA’s daughter slapping Mandya PSI Savitha inside temple premises.
One message is clear: Respect the uniform. No one is above the law. 👮♀️🇮🇳 pic.twitter.com/vsyBq0luup
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ சுரேஷ் கௌடா, "என் மகள் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அவள் கோவிலின் கருவறைக்குச் செல்ல அனுமதி கேட்டிருந்தாள். காவல்துறை அவளை உள்ளே அனுமதிக்க மறுத்தது, ஆனால் ஒரு வட்ட ஆய்வாளரை உள்ளே அனுமதித்தது.

என் மகள் மீண்டும் தன்னை உள்ளே அனுமதிக்குமாறு அவர்களிடம் வேண்டினாள். அப்போது அந்த காவல்துறை அதிகாரி என் மகளைத் திட்டியதாகத் தெரிகிறது.
அதன் பிறகு சண்டை தொடங்கியது. என் மகள் அந்த அதிகாரியை அறைந்த காணொளியை நான் பார்க்கவில்லை. நான் மன்னிப்பு கேட்கிறேன், அதற்காக வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |