மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - மோடி முன்னிலையில் டிகே.சிவகுமார் பேச்சு
karnataka cm says no one can stop build dam on mekadatu: மேகதாதுவில் அணைகட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் மோடியின் முன்னிலையிலே கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம்
கர்நாடக முதல்வர் டிகே.சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேகதாதுவில் அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாகவும், சமீபத்தில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசினார்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
டி .கே .சிவகுமாரின் கருத்துக்கு பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், "இது அவர் கூறுவது போல் ஒருபோதும் நடக்காது. அவர் கூறிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

மேகதாது அணை கட்டும் விஷயத்தில், பாஜக தலைவர்கள் ஆதரவாக உள்ளனர் என்றும், அவரே சொல்லிக் கொள்ள வேண்டியது தான். உண்மையில் அப்படி எதுவும் இல்லை" என தெரிவித்தார்.
மோடி முன்னிலையில் டிகே.சிவகுமார் பேச்சு
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் முன்னிலையிலே மேகதாது அணைகட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று மைசூருவில் காஸ்மோஸ் கோளரங்கத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் அம்மாநில முதல்வர் டிகே சிவகுமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய டிகே சிவகுமார், "மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது.

வனம் தொடர்பான அனுமதிக்கு மத்திய அரசு இறுதி ஒப்புதல் தர வேண்டும். அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.