பஹல்காம் தாக்குதல்: உண்மையாகவே மயிரிழையில் உயிர் தப்பிய பெண்
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில், தான் உண்மையாகவே மயிரிழையில் உயிர் தப்பியதைக் குறித்து விவரித்துள்ளார் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர்.
மயிரிழையில் உயிர் தப்பிய பெண்
ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி, பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று, கர்நாடகாவைச் சேர்ந்த ப்ரதீப் (Pradeep Hegde), அவரது மனைவி சுபா மற்றும் தம்பதியரின் மகன் சித்தாந்த் (12) ஆகியோர், காஷ்மீரிலுள்ள மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரன் புல்வெளிகளுக்கு சென்றுள்ளார்கள்.
சாகச செயல்கள் நடைபெறும் இடத்துக்குச் செல்ல இருக்கும் நேரத்தில் சித்தாந்த் பசிக்கிறது என்று கூறி அடம்பிடிக்க, மூன்று பேரும் கடை ஒன்றிற்கு சாப்பிடச் சென்றுள்ளார்கள்.
ப்ரதீப்பும் சித்தாந்தும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, சுபா கழிவறைக்குச் சென்று திரும்பியுள்ளார்.
அப்போது திடீரென தீவிரவாதிகள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தத் துவங்கியுள்ளார்கள். ப்ரதீப் குடும்பம் தரையில் படுத்துக்கொள்ள, சுபா மேசை மேலிருந்த தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் மொபைல்கள் இருந்த பையை எடுக்க எழுந்துள்ளார்.
அப்போது ஏதோ ஒரு பொருள் மின்னல் வேகத்தில் அவரது காதருகே அவரது முடியை உரசியபடி சென்றுள்ளது.
அது தரையில் சென்று மோதிய பிறகுதான், அது ஒரு துப்பாக்கிக்குண்டு என்பது ப்ரதீப் குடும்பத்துக்குப் புரிந்துள்ளது.
தங்களை அழைத்துச் சென்ற குதிரைக்காரரின் உதவியுடன் அவசர அவரசமாக அங்கிருந்து தப்பியுள்ளது ப்ரதீப் குடும்பம்.
உண்மையாகவே தன் மனைவி மயிரிழையில் உயிர் தப்பியதைக் குறித்து வியப்புடனும் நீங்காத அதிர்ச்சியுடனும் ப்ரதீப் விவரிக்க, கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார் என்கிறார் சுபா.
உயிர் பிழைக்கப்போவதில்லை என்ற முடிவுக்கே தான் வந்துவிட்டதாகக் கூறும் ப்ரதீப், ஒன்றும் ஆகாது என தன் மனைவி கூறிக்கொண்டே இருந்ததுதான் தனக்கு நம்பிக்கையை அளித்ததாகத் தெரிவிக்கிறார் ப்ரதீப்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |