"தேவதாசி ஆக்கிவிடுவோம்" மகளை மிரட்டிய பெற்றோர்; வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்!

Karnataka Devadasi Raichur
By Ragavan Jun 15, 2021 05:35 AM GMT
Report

இந்திய மாநிலம் கர்நாடகாவில், திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தேவதாசி ஆக்கி கோவிலில் விட்டு விடுவதாக பெற்றோர் மிரட்டியதால் இளம்பெண் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சோடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

20 வயதாகும் பெண்ணை அவரது பெற்றோர், மூத்த மகளின் கணவரையே திருமணம் செய்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். பெற்றோரின் இந்த முடிவு இளம்பெண்ணுக்கு பிடிக்கவில்லை. எனவே திருமணம் வேண்டாமென மறுத்துள்ளார்.

ஆனால், திருமணம் செய்யாவிட்டால் தேவதாசியாக்கி கோவிலில் விட்டு விடுவதாக அவரது பெற்றோர் மிரட்டியுள்ளனர். பீதியடைந்த இளம்பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

"தேவதாசி ஆக்கிவிடுவோம்" மகளை மிரட்டிய பெற்றோர்; வீட்டை விட்டு ஓடிய இளம் பெண்! | Karnataka Girl Fled House Parent Threaten Devadasi

அங்கிருந்து யாத்கிர் மாவட்டத்தில் சுர்பூரில் உள்ள தன் உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். இதை தெரிந்து கொண்ட பெற்றோர், அங்கு வந்து மக்களை அழைத்துச்செல்ல முயற்சித்தனர். அனால் அவர் செல்ல மறுத்தார்.

இந்த நிலையில், தகவலறிந்து அங்கு வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலக வக்கீல், இளம்பெண்ணின் பெற்றோரை எச்சரித்து, ஆதிஜாம்பவா கல்விச் சங்கம் நடத்தும் மகளிர் மறுவாழ்வு மையத்தில் இளம்பெண்ணை ஒப்படைத்தார்.

பின்பு, அப்பெண் தனது பெற்றோர் மீது பொலிஸில் புகார் செய்தார். அவர் மீது பெற்றோரும் பதில் புகார் அளித்தனர். புகாரில், தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில், பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்ட வெளியேறியதாகவும் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர்.

பிறகு, இளம்பெண்ணையும் அவரது பெற்றோரையும் பொலிஸார் வரவழைத்து விசாரித்தனர். மகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி பெற்றோர் கோரினர். ஆனால் மகள் சம்மதிக்காததுடன், பாதுகாப்பும் கேட்டதால், ராய்ச்சூரில் இருக்கும் Mahila Santwana Kendra எனும் மகளிர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.

''அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்படுகிறது. அவசியம் ஏற்பட்டால், சுய தொழில் துவங்க நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவருக்கு விருப்பமானவருடன் திருமணம் செய்து வைக்கப்படும்'' என்று ராய்ச்சூர் துணை ஆணையர் ஆர்.வெங்கடேஷ் குமார் கூறினார்.

தேவதாசி முறை, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட போதிலும், இந்தியாவில் சில பகுதிகளில் இன்னும் ஒரு சில இடங்களில் இருந்துவருகிறது என்பதை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US