காதலியை கொன்று புதைத்துவிட்டு...தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலனால் பரபரப்பு!
பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொன்று புதைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூக்கிட்டு தொங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுற்றூலா தளமான காவேரி நிசர்கதாமா பகுதியில் சித்தராஜு மற்றும் சுமித்ரா ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை 18ம் திகதி சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறினால் சித்த ராஜூ தன் காதலி சுமித்ராவை கொலை செய்து உடலை புதைத்து விட்டு, அதன் அருகில் நின்ற மரத்தின் கிளையில் தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு பிறகு அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த சித்த ராஜூவின் சடலத்தை கண்டு, தலக்காடு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
[S7SWQ85 ]
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
அதனடிப்படையில், சமபவ இடத்திற்கு வந்த காவல்துறை உடல்களை கைப்பற்றி தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.