மது வாங்க அடையாள அட்டை கட்டாயம் - மாநில அரசு அதிரடி திட்டம்
மது வாங்க அடையாள அட்டை கட்டாயம் என்ற உத்தரவை கர்நாடக மாநில அரசு பிறப்பித்துள்ளது.
மது வாங்க அடையாள அட்டை கட்டாயம்
கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் இளம் தலைமுறையினர் மது போன்ற பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்தி வருவதாக ஆய்வில் தெரிய வந்தது.
இந்நிலையில், இனி மதுபான பார்கள், பப் போன்ற மதுபானம் வழங்கும் இடங்களில் உள்ளே நுழைய அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மதுபான பார்கள், பப்கள் உள்ளிட்ட இடங்களில் அடையாள அட்டை இல்லை எனில் அனுமதி இல்லை என்ற ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும், நுழைவாயில்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எல்லா நேரங்களிலும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வளாகத்திற்குள் நிகழும் விதிமீறல்களுக்கு உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக, மதுபான உரிமங்களை ரத்து செய்தல், அபராதம் விதித்தல் மற்றும் உரிமையாளர்கள், மேலாளர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடருதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறார்கள் மது, புகையிலை மற்றும் போதைப்பொருட்களை அணுகுவதைத் தடுக்க கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் காவல்துறை இணைந்து அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |