கோவாவுக்கு சுற்றுலா சென்ற கர்நாடக மாநில இளைஞருக்கு நேர்ந்த துயர முடிவு
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநில இளைஞருக்கு நேர்ந்த துயர முடிவு
சாஹாஸ் அஷ்பக் (Sahas Ashpak Masali, 33) என்னும் அந்த இளைஞர், கோவாவிலுள்ள பாகா என்னும் கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அபாயகரமான ஒரு இடத்தில் கடலுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்திருக்கிறார்.

அலைகள் அவர் அமர்ந்திருந்த பாறையில் மோதியடித்துக்கொண்டிருக்க, அவரது நண்பர்கள் அந்தக் காட்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது திடீரென பெரிய அலை ஒன்று சாஹாஸ் அமர்ந்திருந்த பாறையில் மோத, கடலுக்குள் விழுந்துவிட்டார் அவர்.
அவர் கரைக்கு வர போராட, அலைகள் மீண்டும் மீண்டும் அவரை கடலுக்குள் இழுத்துச் செல்ல, ஒரு கட்டத்தில் மாயமாகிவிட்டார் அவர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆனால், பல மணி நேரம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
கடைசியில் அவரது உயிரற்ற உடல்தான் கரையில் ஒதுங்கியுள்ளது.
இந்த துயரச் சம்பவத்தைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |