நடிகர் விஜய்க்கு அபராதம்! ஆதரவாக பேசிய முதல் பிரபலம்
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ 1 லட்சம் அபராதத்தை நீதிமன்றம் விதித்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் பிரித்தானியாவில் இருந்து சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸை கடந்த 2012ல் இறக்குமதி செய்தார்.
ஆனால் இதற்கு நுழைவு வரி செலுத்தாமல் அதற்கு விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக முதல் பிரபலம் ஒருவர் குரல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் தான் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது
அவர்களது உரிமை, அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு என கூறியுள்ளார்.