இலங்கைக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 22 வயது தமிழர்! உலகக்கோப்பையில் மிரட்டல் பந்துவீச்சு
சென்னையை பூர்வீகமாக கொண்ட கார்த்திக் மெய்யப்பன் அமீரக அணிக்காக 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்
இலங்கையின் பதும் நிசங்கா 60 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்
உலகக்கோப்பை லீக் போட்டியில் ஐக்கிய அமீரக அணிக்கு எதிராக இலங்கை அணி 152 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இலங்கை - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான போட்டி கீலாங்கில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரக அணி இலங்கையை துடுப்பாட்டம் செய்ய பணித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தனஞ்சய டி சில்வா அதிரடியாக 21 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய பனுக ராஜபக்சே(5), அசலங்கா(0) மற்றும் கேப்டன் ஷனகா(0) ஆகியோரின் விக்கெட்டுகளை, அமீரக அணியில் விளையாடும் தமிழரான கார்த்திக் மெய்யப்பன் 15வது ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தினார்.
That’s the Hat-trick!
— ICC (@ICC) October 18, 2022
We can reveal that this wicket from Karthik Meiyappan is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Sri Lanka vs UAE. Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/1MV0Rz9AI9
இதன்மூலம் தனது முதல் ஹாட்ரிக் விக்கெட் சாதனையை அவர் படைத்தார். தொடக்க வீரர் நிசங்கா மட்டும் நிலைத்து நின்று ஆட, இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரக அணியின் தரப்பில் கார்த்திக் மெய்யப்பன் 3 விக்கெட்டுகளையும், ஸஹூர் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
AFP