நாதக வேட்பாளர் கார்த்திகா கைது.., உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார நேரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ சென்ற பகுதியில், நாதக சார்பில் போட்டியிட்ட கார்த்திகாவும் செல்ல, அவரை காவல்துறையினர் தடுத்தனர்.
அப்போது அவர் அங்கு தனது கட்சி கொடியை தூக்கிக் காட்டி போராட்டம் நடத்தினார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கார்த்திகா உட்பட பலர் மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், இன்று கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியினர் 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
அந்தவகையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.
இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
— Udhay (@Udhaystalin) October 20, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |