கடைசி ஓவரில் பஞ்சாப்பை 6 ரன் அடிக்கவிடாமல் தோற்கடித்த இளம் வீரர்! நொந்து போன கே.எல்.ராகுல்: வைரலாகும் வீடியோ
ராஜ்ஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், கடைசி ஓவரில் 6 ஓட்டங்கள் அடிக்க முடியாமல் தோற்ற வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், சஞ்சு சாம்சன் தலையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் வெற்றியின் அருகில் வந்த பஞ்சாப் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிகோலஸ் பூரன் 32 ஓட்டங்களுடனும், மார்கம் 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
#KartikTyagi Defended 4 runs in the Final over ???
— Venky NTR ❤️? (@Ntr1Devudu) September 22, 2021
That too with Markram & Pooran on strike?
What a blowing
Young Guns ???#PBKSvRR #IPL2021
@rajasthanroyals pic.twitter.com/rqTNheJhjW
அப்போது அந்த ஓவரை ராஜஸ்தான் அணி சார்பில் கார்திக் தியாகி வீச, இதில் நிகோலஸ் பூரனை 32 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த தீபக் ஹோடாவை டக் அவுட் ஆக்கி வெளியேற்றியதுடன், அந்த ஓவரில் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதனால் தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணியை கார்த்திக் தியாகி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அது தொடர்பான வீடியோவை ராஜஸ்தான் ரசிகர்கள் தற்போது டிரண்டாக்கி வருகின்றனர்.
மேலும் கடைசி ஓவரில் ஒரு 6 ரன் கூட அடிக்க முடியாமல் போய்விட்டோமே என்று கே.எல்.ராகுல் கடைசி ஓவர் முடிந்த பின்பு கடும் சோகத்தில் கீழே இறங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.