கனடாவில் வீட்டை வாடகைக்கு விட்டு மாதம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் இந்தியர்.., அவரின் ஐடியா இதுதான்
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டு மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
யார் இவர்?
பொதுவாகவே பலருக்கும் வெளிநாட்டில் வாழ வேண்டும் என்று விருப்பம் உண்டு. ஆனால், தற்போதைய காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவைச் சேர்ந்த கருண் விஜ் என்பவர் கனடாவிற்கு படிக்க சென்று பட்டம் பெற்று அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அதோடு மட்டுமல்லாமல் வீடுகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.
கருண் விஜ், கனடாவிற்கு படிக்க சென்ற போதே அங்கு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அதனை, படிக்கும் சமயத்திலேயே நனவாக்கினார்.
உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக தெரிவான தமிழர்... ரூ 318,000 கோடி நிறுவனத்தை நடத்திவரும் இவர் யார்?
பின்பு, தன்னுடைய 33 வயதில் கனடாவில் நான்கு வீடுகளைக் கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்து மாதத்திற்கு ரூ.9 லட்சம் சம்பாதிக்கிறார்.
மாணவர்களுக்கு வீட்டு வாடகை
கருண் விஜ், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தார். அதே நேரத்தில், தனது கல்லூரிக்கு அருகே வீட்டை மொத்தமாக வாடகைக்கு விடாமல் ஒரு அறையை தனியாக ஒருவருக்கு வாடகைக்கு கொடுப்பதை கருண் பார்த்துள்ளார்.
பின்பு, 2016 -ம் ஆண்டு மெக்மாஸ்டர் வளாகத்திற்கு அருகிலேயே வீட்டை வாங்கி, குடும்பங்களுக்கு வாடகை கொடுப்பதற்கு பதில் அதிக லாபம் பெற கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு விட திட்டமிட்டார்.
அதன்படி, தனது ஹாமில்டன் வீட்டை 323,904 டொலர் அதாவது ரூ.2.7 கோடி மதிப்பிலான வீட்டை 64,781 டொலர் (ரூ.54 லட்சம்) முன்பணமாக கொடுத்து வாங்கினார். அதனை ஏழு கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்த வாடகையை நம்பி மட்டும் இருக்காமல் அப்ளிகேஷன் இன்ஜினியராகவும், ஆட்டோமேஷன் நிறுவனத்தில் அக்கவுண்ட் மேனேஜராகவும் கருண் விஜ் பணியாற்றினார். தொடர்ந்து, அதிக வாடகை கிடைக்கும் தெற்கு ஒன்டாரியோவில் பல வீடுகளை வாங்கினார்.
தற்போது, வீட்டு வாடகை மூலமாக மட்டும் மாதத்திற்கு 183,000 டொலர் (ரூ.9 லட்சம்) கருண் விஜ் சம்பாதித்து வருகிறார். 2.3 மில்லியன் டொலர் மதிப்பிலான 4 வீடுகளை கனடாவில் வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |