தனியாளாய் போராடிய இலங்கை வீரர் கருணரத்னே! மிரட்டலான ஆட்டம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
முதலில் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குசால் மெண்டிஸ் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோது, மறுமுனையில் சமிகா கருணரத்னே தனியாளாய் போராடினார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 100 ஓட்டங்களுக்குள் சுருண்டுவிடும் நிலை இருந்தது.
A fighting effort from Chamika Karunaratne ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 24, 2022
Well Played!#SLvAUS pic.twitter.com/NuNW8duhyt
ஆனால் கருணரத்னேவின் நங்கூரமான ஆட்டத்தினால் இலங்கை 150 ஓட்டங்களை கடந்தது. அவர் 75 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் விளாசி 75 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார். அவருக்கு இதுதான் முதல் சர்வதேச ஒருநாள் அரைசதம் ஆகும்.
இலங்கை அணி 43.1 ஓவரில் 160 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ், ஹேசல்வுட், குணேமன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
160 on the board! Can our bowlers defend the target?#SLvAUS pic.twitter.com/6lVHvNmcez
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 24, 2022