2021 சட்டமன்ற தேர்தலில் யாரும் போட்டியில்லை... பிரபல கட்சியை தோற்கடிக்க சபதமேற்ற கருணாஸ்! வெளியான அதிரடி அறிக்கை
2021 சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என அச்சங்கத்தின் தலைவரும் நடிகருமான கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்்
அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்புடன் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழத்த அண்ணா திமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது.
இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக 234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்ள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது.
அண்ணா திமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் களநிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற தலைமை அறிவுறுத்துகிறது என கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், இந்த அறிக்கையில் தேதி ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
