முழங்கால் வரை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 100ml
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.
பின் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துகொள்ளவும்.
இந்த எண்ணெயை தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். பின் 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெயை தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |