பாரம்பரியமான சுவையில் கருப்பட்டி பணியாரம்.., எப்படி செய்வது?
கருப்பட்டி உடலுக்கு மிகுந்த ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் இது, ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
அதன்படி, கருப்பட்டி வைத்து செய்கின்ற இந்த பணியாரத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கருப்பட்டி பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 2 கப்
- உளுந்து- 3 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- கருப்பட்டி- 1½ கப்
- தண்ணீர்- ½ கப்
- ஏலக்காய்- 5
- சுக்கு பொடி- ½ ஸ்பூன்
- உப்பு- ¼ ஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
- தேங்காய் துருவல்- ¾ கப்
- கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து கழுவி தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, ஏலக்காய், சுக்கு பொடி, உப்பு மற்றும் சிறிதளவு கருப்பட்டி கரைசல் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி மூடிபோட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
பின்னர் இதில் மீதமுள்ள கருப்பட்டி கலவை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் நெய், தேங்காய் துருவல் மற்றும் கருஞ்சேரகம் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் குழிப்பணியார சட்டி வைத்து நெய் சேர்த்து மாவை ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |