தித்திக்கும் சுவையில் கருப்பட்டி லட்டு.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்புதான் இந்த கருப்பட்டி லட்டு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கருப்பட்டி லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- ½ kg
- கருப்பட்டி- ¾ கப்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- திராட்சை- 10
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- எண்ணெய- தேவையான அளவு
செய்முறை
முதலில் கடலை மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து நன்கு பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்து ஆறவைக்கவும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூந்தி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி பொறித்து எடுக்கவும்.
அடுத்து பாகில் பொரித்த பூந்தி, நெய், ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக இதில் நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான கருப்பட்டி லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |