செட்டிநாடு கருப்பு கவுனி அரிசி பாயாசம்.., எப்படி செய்வது?
கருப்பு கவுனி அரிசி ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது பேரரசர் உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
மேலும், இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த செட்டிநாடு கருப்பு கவுனி அரிசி பாயசம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கவுனி அரிசி- 1 கப்
- நாட்டு சர்க்கரை- ½ கப்
- தேங்காய் பால்- 1 கப்
- தேங்காய்- 1
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- முந்திரி- 5
- திராட்சை- 5
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் கருப்பு கவுனி அரிசியை இரண்டு முறை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதனை ஒரு குக்கரில் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 6 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து குக்கரை திறந்து மத்து வைத்து அரிசியை ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவும்.
பின் வேகவைத்த அரிசியில் தேங்காய்ப்பால், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வதக்கிய முந்திரி திராட்சை சேர்த்தால் சுவையான கருப்பு கவுனி அரிசி பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |