ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி இடியாப்பம்.., எப்படி செய்வது?
உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு பாரம்பரிய அரிசியாகும்.
இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
மேலும், இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அந்தவகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கவுனி அரிசி- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு துணியில் பரப்பி உலர்த்தி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பின் அரைத்த மாவை கட்டியில்லாமல் சலித்து எடுத்து அதில் நெய், உப்பு மற்றும் சுடுதண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக பிணைந்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதனை இடியாப்ப குழலில் சேர்த்து பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் பிழிந்த இடியாப்பத்தை 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சத்தான கருப்பு கவுனி அரிசி இடியப்பம் தயார்.