உடலிற்கு வலுசேர்க்கும் சத்தான கருப்பு உளுந்து புட்டு.., எப்படி செய்வது?
பொதுவாக புட்டு என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும்.
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
அந்தவகையில், உடலிற்கு வலுசேர்க்கும் சத்தான கருப்பு உளுந்து புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- பச்சரிசி- ½ கப்
- தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை- 3 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 5
- உலர் திராட்சை- 5
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் கருப்பு உளுந்து மற்றும் பச்சரிசியை 2 முறை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து கருப்பு உளுந்து மற்றும் பச்சரிசியை மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வறுத்த பொருட்களை ஆறவைத்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அரைத்த மாவில் சிறிதளவு தண்ணீர் தெளித்து உதிரிஉதிரியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் பிணைந்த மாவை இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக மாவில் நாட்டுச்சர்க்கரை, தேங்காய், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால் கருப்பு உளுந்து புட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |