கரூர் கூட்ட நெரிசலில் மேலும் ஒரு துயரம்.., இறப்பு எண்ணிக்கை உயர்வு
தமிழக வெற்றி கழக தலைவர் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை உயர்வு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது அரசியல் பணிகளை தீவிரமாக செய்துவரும் நிலையில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் விஜய் மேற்கொண்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியாவை உலுக்கும் சம்பவம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, நேற்று பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்து இறப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்தது.
இந்த துயரம் மீள்வதற்குள் இந்த இறப்பு எண்ணிக்கை இன்று 41 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், 7 பேர் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |