கரூரில் த.வெ.க பேரணியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
கரூர் த.வெ.க விஜய் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்." என்று நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று (செப் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 6 பேர் குழந்தைகள், 16 பேர் பெண்கள் என தகவல்கள் கூறுகின்றன.
100-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு கல்லூரி மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) September 27, 2025
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.#Karur #Stampede
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |