இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்தது ஏன்? கூட்டத்தில் மிதித்த கும்பல் - கசிந்துள்ள ஆடியோ
கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முக்கிய காரணமா எனும் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் பல வீடியோக்களும், ஆடியோக்களும் கசிந்த வண்ணம் உள்ளன.
இச்சம்பவத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதும் நடவடிக்கைகள் மீதும் பல கேள்விகள் பல தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் இறந்தவர்களை இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்தது ஏன்? எந்த உறவினர்கள் இறந்தவர்களை அடையாளம் காண்பித்தார்கள் என்ற பதிவுகள் எங்கே?
ஏற்கெனவே அந்த மருத்துவனையில் இறந்தவர்களை இந்த கூட்டத்தில் இறந்தவர்களாக கணக்கு காண்பிக்கப்பட்டதா என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
சிகிச்சை அளிக்கப்பட மருத்துவனையில் அன்று வேலை பார்த்த ஒருவரின் தொலைபேசி ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்த கும்பல் ஒன்று கீழே விழுந்த மக்களின் கழுத்திலும், வயிற்றிலும் கால்களைக் கொண்டு மிதித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பட்ட ஆம்புலன்சில் தி.மு.க கட்சி பேனர் ஒட்டப்பட்டிருந்தது, அங்கு உதவிக்காக வழங்கப்பட்ட தண்ணீர் போத்தல்களில் செந்தில் பாலாஜியின் பெயர் கொண்ட ஸ்டிக்கர் இருந்தது. இது ஒரு கீழ்த்தரமான அரசியல் என்று விமர்சிக்கப்படுகிறது.
பெரும்பாலான பொதுமக்கள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கரூரில் சனிக்கிழமை நடந்தது விபத்து அல்ல திட்டமிடப்பட்ட சதி எனும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்ற பல ஆதாரங்கள் கொண்ட காணொளி தொகுப்பை இங்கே காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |