இந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் விஷமாம்!
பொதுவாகவே ஒரு சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது உடலிற்கு தீங்கு ஏற்பட வழிவகுக்கும்.
மரவள்ளிக்கிழங்கை மூடி சமைக்கக் கூடாது என நம் முன்னோர்கள் சொல்வது வழக்கம். காரணம் என்னவென்றால் அது நச்சு தன்மையாக மாறிவிடும் என்பதே.
அதுப்போலவே ஒரு சில உணவுகளை சேர்த்து எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில் கருவாட்டை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- கருவாடு சாப்பிட்டால் மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது.
- மீன், கருவாடு சாப்பிட்ட பிறகு பால், தயிர் சாப்பிடக்கூடாது.
- அப்பளம் மற்றும் ஊறுகாயும் சேர்த்து சாப்பிடக்கூடாது.
-
கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது.
கருவாட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்
கருவாட்டில் உயர் தரம் கொண்ட புரதச்சத்து இருக்கிறது. குறிப்பாக கருவாட்டில் 80 முதல் 85 சதவீதம் வரையில் புரதம் மட்டுமே இருக்கிறது.
கருவாட்டில் உள்ள அமினோ அமிலங்கள் என்பது முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களுக்கு சமமானது.
கருவாடு தொக்கு
தேவையானவை
-
நெத்திலி கருவாடு - 100 கிராம்
-
பெரிய வெங்காயம் - 2
-
தக்காளி - 2
-
மஞ்சள்தூள், கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
-
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் கருவாடு சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
- அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களாவது வேக வைக்க வேண்டும்.
-
இறுதியாக கொதித்து வரும் தொக்கில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான கருவாட்டு குழம்பு ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |