கருவாடு சாப்பிட்டு இருக்கீங்களா? கண்டிப்பா இந்த உண்மைய தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவருக்கும் மாமிசம் இல்லாமல் சாப்பாடு சாப்பிட முடியாது. அசைவ சாப்பாடு என்றாலே ஒரு பிரியம் தான். அதிலும் கோழி, மீன், நண்டு மற்றும் கருவாடு என்று பல உண்பார்கள்.
ஆனாலும் கருவாட்டை ஒதுக்கி வைப்பது தான் வழக்கம். அதற்கு கருவாட்டின் மணம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் அதை சாப்பிடுவதால் உடல் ரீதியாக எவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்று தெரியுமா?
ஆம். உண்மை தான். அந்த கருவாட்டை சாப்பிட்டால் உடலில் பல சக்திகள் கிடைத்து புத்துணர்ச்சியடையும்.
ஆகவே கருவாட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு கருவாடு தான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் இருகின்றது என்று கூறலாம். மேலும் இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும்.
இதை பற்றி சற்று விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
தீர்வு
சளி, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாடு சாப்பிட்டால் உடனே தீர்வு கிடைக்கும்.
கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.
பெண்களுக்கு வரும் நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளைச் சரி செய்யும்.
பெண்களுக்கு பால் சுரப்பதற்கு பால் சுறா கருவாடு உதவும்.
இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது மற்றும் வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்.
சைனஸ், சளி இருமல், ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இவைகளை சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் கருவாட்டை அதினமாக எடுத்துக்கொள்ள கூடாது.
சமைக்கும்போது, அதில் மிளகு பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகை உணவுப்பொருட்களை சேர்த்து சமைத்தால் நல்லது.
இதை வைத்து ரசம் வைத்தும் சாப்பிடுவது வழக்கம். ஆகவே அந்த ரசத்தை எப்படி செய்வது என்று மேலும் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
- இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதனுடன் தக்காளியையும் அரைத்து எடுக்க வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
- மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
-
ஒரு தக்காளி, வெக்காயம் பொடியாக நறுக்கி போடவும்.
- பிறகு மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமகவே சேர்த்து ஊற்ற வேண்டும்.
- இறுதியாக கருவாட்டை சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லியை இறக்கி தூவினால் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவயைான கருவாட்டு ரசம் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |