வெறும் கோழி இருந்தால் போதும்...! ஊரே மணமணக்க கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்யலாம்
Healthy Food Recipes
By Kirthiga
அசைவ பிரியர்களுக்கு கோழி இறைச்சி என்றாலே ஒரு பிரியம் தான். கோழி இறைச்சி வைத்து செய்யக் கூடிய அனைத்து விதமான உணவையும் விரும்பி எடுத்துக்கொள்வார்கள்.
அந்தவகையில் கறிவேப்பிலையும் அதிகமாக சேர்த்து அப்படி கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்யலாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை சிக்கன் - 1 கிலோ
- காய்ந்த மிளகாய் - 7
- மிளகு - 2 தேக்கரண்டி
- சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
- தனியா - 2 மேசைக்கரண்டி
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய் - 3
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 2 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 4
- தக்காளி - 2 நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
- கடாயில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்.
- பின்பு கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பிறகு உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து கலந்துவிடவும். 5 நிமிடம் வேகவிடவும்.
- பின்பு உப்பு, அரைத்த மசாலா பொடியை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
- தண்ணீர் வற்றி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US