முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கறிவேப்பிலை பொடி.., எப்படி செய்வது?
கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள சத்துக்களால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
அந்தவகையில் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கு சுவையாக இருக்கும் கறிவேப்பிலை பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை - 4 கப்
- மிளகு - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி விதை- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 5
- பெருங்காயம் - சிறிதளவு
- புளி - சிறிதளவு
- உளுந்தம்பருப்பு - 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு, புளி, கொத்தமல்லி போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

அனைத்தையும் ஆற வைத்த பின்னதாக மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து இதில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை பொடி ரெடி.
பின் இவற்றை இட்லி, தோசை, சாதத்துடன் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |